8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

சென்ற பாடத்தில் வேடிக்கைக் கதைகள் பற்றிய அறிமுகம் கண்டோம். இப்போது அதன் தொடர்ச்சியாக மற்றொரு கதையினைப் படிக்க இருக்கின்றீர்கள். உண்மையும் கற்பனையும் கலந்த நிலையில் கதைகள் தோன்றுகின்றன. உரையாடல், பாத்திரப்படைப்பு, கதை சொல்லும் முறை ஆகியவை கதைகளை ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுகின்றன. பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தமிழில் சிறுகதைகள் அமைகின்றன. வேடிக்கையாகக் கதை சொல்லுதல், வேடிக்கை மனிதர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்ட கதைகளைச் சொல்லுதல், வேடிக்கையான நிகழ்வுகளைக் கொண்ட கதைகளைச் சொல்லுதல் என்பதாக வேடிக்கைக் கதைகள் அமைகின்றன. இப்போது வேடிக்கைத்தனம் மிக்க மணி என்ற இளைஞனைப் பற்றிய கதையினை இங்கே படிக்க இருக்கின்றீர்கள்.