8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  வானம் பார்த்த பூமியாக அமைந்தது எது?

வானம் பார்த்த பூமியாக அமைந்தது அழகாபுரி கிராமம்.

2.  ‘உனக்கு நான் துணை எனக்கு நீ துணை’ என்று மணி யாரிடம் கூறினான்?

‘உனக்கு நான் துணை எனக்கு நீ துணை’ என்று மணி அம்மனிடம் கூறினான்.

3.  ஊரார் கூட்டம் நடத்தி என்ன முடிவு செய்தார்கள்?

ஊரார் கூட்டம் நடத்தி மணியை ஊரைவிட்டுத் துரத்திவிட முடிவு செய்தார்கள்.

4. கிழவி என்று மணி யாரைக் குறிப்பிட்டான்?

கிழவி என்று மணி இளவரசியைக் குறிப்பிட்டான்.

5.  மணி முனிவரை எங்குச் சந்தித்தான்?

மணி முனிவரை வனத்தில், அரசமரத்தடியில் சந்தித்தான்.

6.  ‘இரவு தங்குவதற்கு நல்ல இடம்’ என்று மணி எதனைத் தேர்வு செய்தான்?

இரவு தங்குவதற்கு நல்ல இடம் என்று மணி அம்மன் கோயிலைத் தேர்வு செய்தான்.

7.  மணியின் தொல்லை பொறுக்காத ஆசிரியர் என்ன செய்தார்?

மணியின் தொல்லை பொறுக்காத ஆசிரியர் நெடுநாள் விடுப்புப் போட்டு விட்டார்.

8.  ‘யாரும் போகாத இடத்திற்குப் போகிறேன்’ என்று மணி யாரிடம் கூறினான்?

‘யாரும் போகாத இடத்திற்குப் போகிறேன்’ என்று மணி முனிவரிடம் கூறினான்.

9.  மன்னரின் மருமகன் ஆனவன் யார்?

மன்னனின் மருமகன் ஆனவன் மணி.

10.  ‘உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை’ கூறியவர் யார்?

‘உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை’ கூறியவர் மணி.