8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

மையக்கருத்து
Central Idea


வேடிக்கையாகக் கதை சொல்லுதல், வேடிக்கை மனிதர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்ட கதைகளைச் சொல்லுதல், வேடிக்கையான நிகழ்வுகளைக் கொண்ட கதைகளைச் சொல்லுதல் என்பதாக வேடிக்கைக் கதைகள் அமைகின்றன.

மணி என்பவன் சொல்லிலும், செயலிலும் குறும்புத்தனம் உடையவன். மற்றவர்களைக் கேலிக்குரியவராக ஆக்குவது அவன் விருப்பம். இதனால் சிரிப்பும், சில வேளைகளில் சிக்கலும் உண்டாகின்றன. இதனால் அவனை மக்கள் ஊரை விட்டுத் துரத்துகின்றனர். அவன் காட்டில் ஒரு முனிவரைச் சந்திக்கிறான். அவரிடமும் தன் குறும்புத்தனத்தைக் காட்டுகிறான். முனிவர் அவனை வாழ்த்தி அனுப்புகிறார். மணி ஊர்ப்புறத்தில் உள்ள கோயிலில் தங்குகிறான். அங்கே அந்நாட்டு இளவரசி வருகின்றாள். அவன் இளவரசியிடம் காட்டிய குறும்புத்தனம் அவனை மணக்கும்படி ஆகிறது. இவ்வளவும் மணி கண்ட கனவாகக் கதை முடிகிறது.

Telling stories funnily, with funny characters as lead persons, with funny situations is funny Literature.

Mani is a mischievous person, in words and deeds. He always makes fun of people. Thus he cheers everyone but sometimes gets into difficulties. People drive him away from the village. He meets a sage in a forest. He acts funnily with him also; the sage is pleased and he blesses and sends him. Mani stays in a temple at the outskirts of town. There comes a princess of that land. He behaves funnily with her also. It so happens that they both get married. This is only Mani’s dream.