வான ஊர்தி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
உலகில் உள்ள உயிரினங்களில் மிகச் சிறப்பானவை பறவைகள்தான். ஏனென்றால், அவை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குப் பறந்து செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. இந்த அழகிய உலகை மேலிருந்தபடியே பார்க்கக் கூடிய ஆற்றல் உடையவை. சிறகுகளை விரித்து அவை மேலே எழும் காட்சி ஓர் அதிசயம்தான். இந்த அதிசயத்தை மனிதனும் செய்ய முடிந்தால்.... இதுபோன்ற சிந்தனையின் வெற்றிதான் வான ஊர்தி. பறவைகளைப்போல வானமே எல்லை என்ற அளவிற்கு மனிதனும் பறக்கத் தொடங்கி விட்டான். மனிதனைப் பறக்கவைக்கும் வான ஊர்தியைப் பற்றிய தகவல்களை இந்தப் பாடம் உங்களுக்கு விளக்குகிறது.