வான ஊர்தி
பயிற்சி - 4
Exercise 4
1. வான ஊர்தியின் தொடக்கக் கால மாதிரி எது?
பறவைகளின் சிறகுகள்தான் வான ஊர்தியின் தொடக்கக் கால மாதிரிகள்.
2. கிளமண்ட் ஆடர் அவர்களின் கண்டுபிடிப்பு குறித்து எழுதுக.
கிளமண்ட் ஆடர் பறக்கும் பொறியைச் செய்தார். இது 164 அடிதூரம் மேலே எழுந்து பறந்தது.
3. வான ஊர்திகளின் வகைகள் யாவை?
உலங்கு வான ஊர்திகள் (Helicopters). மீஒலி விரைவு வான ஊர்திகள்(Supersonic) போர் வானூர்திகள் ஆகியன ஆகும்.
4. விரைட் சகோதர்கள் வடிவமைத்த வான ஊர்தியைப் பற்றி எழுதுக.
விரைட் சகோதரர்கள் வடிவமைத்த வானஊர்தியில் ஒரு மனிதனை, விபத்து, எதுவும் இல்லாமல் ஏற்றிச் செல்ல முடியும்.
5. தமிழ் இலக்கியங்களில் உள்ள வலவன் ஏவா வான ஊர்தியின் சிறப்பு என்ன?
இது ஓட்டும் ஆள் இல்லாமலே (தானியங்கியாக) இயங்கக் கூடியது.
6. தமிழரின் அறிவியல் திறத்தைப் புலப்படுத்துவது எது?
வலவன் ஏவா வானஊர்தி என்ற புறநானூற்றப் பாடல் வரியாகும்.
7. சென்னையில் வானூர்தி நிலையம் எங்குள்ளது?
சென்னைக்கு அருகில் மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையம் உள்ளது.
8. எதனைப் பார்த்து மனிதன் வான ஊர்தியைக் கண்டுபிடித்தான்?
பறவையைப் பார்த்து மனிதன் வானஊர்தியைக் கண்டு பிடித்தான்.
9. வலவன் ஏவா வான ஊர்தி என்றால் என்ன?
ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் (Pilot less aero plane) வான ஊர்திக்கு வலவன் ஏவா வான ஊர்தி என்று பெயர்.
10. வான ஊர்தி ஆராய்ச்சியில் உயிர் துறந்தோர் யாவர்?
வான ஊர்தி ஆராய்ச்சியில் உயிர் துறந்தோர் லைலி என்தல், பிளிச்சர் ஆகியோர் ஆவர்.