11. வான ஊர்தி

வான ஊர்தி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  வளவன் பெற்றோர்களுடன் சென்ற ஊர் எது?

அ) தில்லி

ஆ) சென்னை

இ) குற்றாலம்

ஈ) கடலூர்

அ) தில்லி

2.  இளமதி என்பவள் யார்?

அ) வளவனின் தங்கை

ஆ) வளவனின் தாய்

இ) வளவனின் அம்மா

ஈ) வளவனின் அக்காள்

அ) வளவனின் தங்கை

3.  அடிக்கடி வெளியூர் செல்லக் கூடியவர் யார்?

அ) இளமதியின் அம்மா

ஆ) வளவனின் அப்பா

இ) வளவனின் தாத்தா

ஈ) வளவனின் மாமா

ஆ) வளவனின் அப்பா

4.  பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பது யாருடைய கவிதை அடி?

அ) வாலி

ஆ) மருதகாசி

இ) வைரமுத்து

ஈ) கண்ணதாசன்

ஈ) கண்ணதாசன்

5.  வலவன் ஏவா வான ஊர்தி என்ற தொடர் எதனை எடுத்துக் காட்டுகிறது?

அ) தமிழரின் பண்பாடு

ஆ) தமிழரின் வாழ்வியல்

இ) தமிழரின் அறிவியல் திறம்

ஈ) தமிழரின் இறை நம்பிக்கை

இ) தமிழரின் அறிவியல் திறம்

6.  விரைட் சகோதரர்கள் எந்த நாட்டினர்?

அ) இத்தாலி

ஆ) அமெரிக்கா

இ) பிரான்சு

ஈ) இந்தியா

ஆ) அமெரிக்கா

7. முதன் முதலில் பறவையைப் பார்த்துக் கண்டறியப்பெற்ற வான ஊர்தியின் பெயர் என்ன?

அ) உலக வான ஊர்தி

ஆ) போர் விமானம்

இ) ஆர்னிதோப்டர்

ஈ) வான ஊர்தி

இ) ஆர்னிதோப்டர்

8.  வளவனின் தங்கை விமானத்தில் என்ன செய்தாள்?

அ) தூங்கினாள்

ஆ) ஆடினாள்

இ) பாடினாள்

ஈ) ஓடினாள்

அ) தூங்கினாள்

9.  வான ஊர்தியில் வளவனுக்குச் சாப்பிட என்னத் தரப்பட்டது?

அ) தேனீர்

ஆ) பால்

இ) இனிப்பு

ஈ) சிற்றுண்டி

இ) இனிப்பு

10.  வலவன் ஏவா வான ஊர்தி என்ற சொற்றொடர் உள்ள இலக்கியம் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) புறநானூறு

இ) குறுந்தொகை

ஈ) பரிபாடல்

ஆ) புறநானூறு