11. வான ஊர்தி

வான ஊர்தி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  விரைட் சகோதரர்கள் ----------- மலையில் வான ஊர்திச் சோதனையைச் செய்து வெற்றி பெற்றனர்.

விரைட் சகோதரர்கள் வடக்கு கரோலினா மலையில் வான ஊர்திச் சோதனையைச் செய்து வெற்றி பெற்றனர்.

2.  விரைட் சகோதர்களின் முழுப் பெயர் --------, ----------.

விரைட் சகோதர்களின் முழுப் பெயர் ஆர்வில் ரைட், வில்பர் விரைட்.

3.  ---------- வான ஊர்தி பழந்தமிழ்நாட்டில் இருந்தது.

வலவன் ஏவா வான ஊர்தி பழந்தமிழ்நாட்டில் இருந்தது.

4.  தில்லிக்குப் போன தங்கையின் பெயர் --------.

தில்லிக்குப் போன தங்கையின் பெயர் இளமதி

5.  தில்லிக்கு வான ஊர்தியில் ----------, -------- பெற்றோர் சென்றனர்.

தில்லிக்கு வான ஊர்தியில் வளவன், இளமதி பெற்றோர் சென்றனர்.

6.  முதன்முதலாக ---------- ஒரு மாதிரியை உருவாக்கினார்.

முதன்முதலாக ஆடர் ஒரு மாதிரியை உருவாக்கினார்.

7.  உயிரை விட்டு வான ஊர்திச் சோதனையில் ஈடுபட்டவர்கள் --------, ---------.

உயிரை விட்டு வான ஊர்திச் சோதனையில் ஈடுபட்டவர்கள் லைலிஎன்தல், பிளிச்சர்

8.  விரைட் சகோதரர்கள் கண்டறிந்த வான ஊர்தியின் மிக முக்கியமான பயன் ---------- ஆகும்.

விரைட் சகோதரர்கள் கண்டறிந்த வான ஊர்தியின் மிக முக்கியமான பயன் மனிதப் பயணம் ஆகும்.

9.  போருக்கு ----------- தற்போது பயன் படுத்தப்பெறுகின்றன.

போருக்கு வான ஊர்திகள் தற்போது பயன் படுத்தப்பெறுகின்றன.

10.  வான ஊர்தி --------- தன் பயணத்தைத் தொடங்கும்.

வான ஊர்தி தரையில் ஓடித் தன் பயணத்தைத் தொடங்கும்.