பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
386

New Page 1

    ‘கலத்திலிட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று’

பக். 245.

    ‘சம்சாரிகளில் அறிவு கேடர் முற்றறிவினர் என்னுமாறு போன்று’, ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப்போன்று’

பக். 248.

    ‘விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று’

பக். 256.

    ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று

பக். 256, 317.

    ‘பிடிதோறும் நெய்யொழியச் செல்லாத சுகுமாரரைப் போன்று’

பக். 258.

    ‘ஸ்ரீ மதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார்’

பக். 328.

    ‘கடலிலே முத்துப்பட்டது என்றுமாறு போன்று’

பக். 259.

    ‘செல்வக்கிடப்பு உண்டாயினும் மஹிஷி ஸ்வேதத்துக்கு ஆளிட ஒண்ணாதது போன்று’

பக். 263.

    ‘புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால், ‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ?’ என்று நெஞ்சாறலோடே தலைக்கட்ட வேண்டி வரும்; மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல்படவேண்டாதே இருக்கலாமன்றே? அதுபோன்று’

பக். 265.

    ‘சன்னி சுரம் வந்தவர்களைப் போன்று,’ ‘இரத்தினாகரம் போலே’

பக். 270.

    ‘அவனை அடைவதற்கு முன்பு இடையிலே உள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றுதல் போன்று’

பக். 274.

    ‘கரும்பு தின்னக் கூலி போன்று’

பக். 275.

    ‘மாதாவைப் பேணுதல் அழகிது என்னுமாறு போன்று’

பக். 279.

    ‘சாணிச்சாற்றைப் போன்று சுத்தன் என்று கொண்டார்கள்’

பக். 284.

    ‘ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று’

பக். 286.