பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

112

New Page 1

பொற்பு

- அழகு 108

பொறை

- தாங்குதல், சுமத்தல் 199

மஃகான் குறுக்கம்

-

“ய” கர ஒற்றும் “மி” யும் அலகு பெற்றது.

197

மகி

- பூமி 538

மகிணன்

- மகிழ்நன், கணவன் 228,431,619

மசித்தல்

- நசித்துக் குமைத்தல் 524

மசித்து உலறி

- தோய்த்து உலர்த்தி 524

மடி

- மடங்கு 554

மதர்

- செருக்கு 38

மதவாரி

- மதவெள்ளம் 477

மந்தரம்

- திசை 476

மம்மர்

- துன்பம் 50

மயிடரன்

- எருமை வடிவான அரக்கன் 159, 237

மவுலி

- முடி 292

மழு

- சம்மட்டி 350

மறிதல்

- மடங்குதல் 385

மறுக்கம்

- மனக்குழப்பம் துன்பம்  551

மறுகு

- பக்கம் 14

மன்றாடவந்தார்

- சிவபெருமான் 391

மாகம்

- ஆகாயம் 408

மாலி, சுமாலியர்

-

மாயம் வல்ல அரக்கர், பாகவதம் 7-8-57 வால்மீகி ராமாயணம் 7-8-6

197

மால்

- மயக்கம் 278, 436
மேகம் 476

மாரணம்

- கொல்லும் படை 177

மானம்

- பெருமை 483

மிசிரர்

-

கலப்பு வகையினர், திலதம் அணியார்

100

மிடல்

- வலிமை 499

மிடை

- நெருங்கிய 453

மிறைத்தல்

- வருந்தல் 91

மீளி

- வலிமை உள்ளவன், எமன் 494

முகச்சொக்கர்

- சிவபெருமான் 106

முகத்து

- புண்ணின் வாயில் 575

முகுத்தம்

- முகூர்த்தம், ஏற்ற காலம் 307

முரி

- பாலை நிலம் 63

முருகு

- இளமை, மணம், அழகு 270

 

-

முலைக்கண் செந்நிறமாய் இருந்து, கருக்கொண்டபின் கரு நிறம் பெற்று விம்மும்

287