பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

111

பழு எலுப்பு

- விலா எலும்பு 513

பழுதுபடல்

- குற்றம் செய்தல் 543

பாசனம்

- பாத்திரம், கொள் கலம் 122

பாணி

- கை 182

பாதசிலை

- தூண் அடி 83

பாலிகை

- முளைப் பயிர் 256

பாலை நில மரங்கள்

-

புன்கு, சூரை, கள்ளி, உகாய், விழல்,
வெள்ளில், களவீரை, வன்னி,
கள்ளி, முள்ளி, வாகை, முதலீகை,
முட்காலை, வேல், வெதிர் நெல்லை, விடதேரு, வெட்பாலை, மரல்

62-64

பாவடி

- யானையின் புற அடி,-பரந்த அடி 642
யானை [ஆகுபெயர்] 615

பாழி

-

வலிமை, அகலம், பாழான, சூன்யமான

177

பாறு

- பெருங்கழுகு 135,466,623

பாறுதல்

- ஓடுதல் 135

பிடாரர்

- குழல் ஊதுவோர் 156

பிண்டிபாலம்

- எறியும் வளைந்த படை 489

பித்தி

- சுவர் 83

பிலம்

- குகை, குழி 221

பிறங்க

- விளங்க 223

புகர்

- முகப்படாம் 22

புகுதல்

- வீழ்தல் 570

புங்கவன்

- தலைவன் 211

புடை

- பக்கம் 263

புரத்தவர்

- ஊரர் 464

புரிசை

- மதில் 8

புரை

- சந்து 506
பொருந்தும் 677

புறம்

- வெளி 176

பூதவண்டு

-

தேன் அன்றி வேறு உண்ணாததால தூய வண்டு

588

பூணாத கனகம்

-

அணியாத பொன், இயற்கையாக ஏற்படும் பசலை

287

பூழி

- புழுதி 493

பெண்பெருமாள்

- திருமகள் 691

பேடு

- அலி 176

பைரவர்

-

காளியின் பரிசனங்களில் ஓர் இனத்தவர்

98-101

பொழில்

- உலகம் 88