Primary tabs
2.0 பாட முன்னுரை
கலைகளுள் சிறந்ததாகவும் காலத்தால்
அழிக்க முடியாததாகவும்
விளங்குவது இலக்கியக்கலை. இலக்கிய வடிவங்களுள்
பழைமையானது, இனிமையானது கவிதைவடிவம். கவிதை
இலக்கியங்களில் சிறப்புமிக்கது காப்பிய வடிவம். நீண்ட
தொடர்நிலைச்
செய்யுள்களாக அமையும் காப்பியங்கள், கற்போர்
நெஞ்சில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றன.
இத்தகைய சிறந்த
காப்பியங்கள் பல தமிழில் உள்ளன. அவற்றுள், கிறித்துவ சமயம்
சார்ந்த
செய்திகளைக் கூறும் தேம்பாவணி, தமிழிலக்கிய
வரலாற்றில் தனித்து விளங்குகிறது. அக்காப்பியத்தை
உங்களுக்கு
அறிமுகப்படுத்தி, அக்காப்பியத்தின் சுவையை ஓரளவு நுகரச்
செய்வதே இப்பாடத்தின்
நோக்கமாகும்.