Primary tabs
நாற்கவிராச நம்பி எழுதியது அகப்பொருள் விளக்கம் என்ற
நூல். இந்நூல் நம்பியகப் பொருள் என்ற பெயரில் பெரிதும்
அழைக்கப்படுகிறது. இந்நூலின் இரண்டாவது இயல் களவியல்
ஆகும். இந்த இயலில் 54 சூத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த இயலில் கூறப்பட்டுள்ள செய்திகளை இரண்டு வகையாகப்
பிரிக்கலாம். அவை:
(2) களவிற்குரிய கிளவித் தொகைகள்
இவ்விரண்டின் வகை தொகைகள் பற்றியே இவ்வியல் (களவியல்)
அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, இப்பாடம் தமிழ் இலக்கணத்தை
அறிமுகம் செய்வதோடு, நம்பியகப் பொருளின் ஆசிரியர், நூல்,
அகப்பொருள் பற்றிய செய்திகளையும்
முதற்கண்
எடுத்துரைக்கிறது.
இப்பாடம் முன்னுரை முதல்
முடிவுரை வரை ஏழு
பகுப்புகளாக அமைக்கப்பட்டுள்ளது.