Primary tabs
அகம் என்றால் உள்ளம், மனம் என்ற பொருள்கள் உண்டு.
அகப்பொருள்
என்றால் உள்ளம் சார்ந்த அல்லது மனம் சார்ந்த
பொருள்கள் எனலாம். அதாவது தலைவனும்
தலைவியும் (காதலர்
- கணவர், காதலியர் - மனைவியர்) தாங்கள் பெற்ற இன்பத்தை
வெளிப்படையாக உலகத்தாருக்குக் கூற இயலாது.
அவ்வின்பங்களை அகப்பொருள் என்பர். மாறாக,
வெளிப்படையாக உலகத்தாருக்குத் தெரிவிக்கும் வகையில்
அமைந்த வீரம், கொடை, புகழ் போன்றவற்றைப்
புறப்பொருள்
என்பர். சுருக்கமாகக் கூறின், உள்ளத்தால் நினைந்து
மகிழ்வனவற்றை அகம் என்றும் பிறரிடம் சொல்லி
மகிழ்வனவற்றைப் புறம் என்றும் கொள்ளலாம்.
கைகோள் என்றால் ஒழுக்கம் என்று பொருள். அதாவது
பின்பற்றப்படும் நெறிகள். அகப்பொருளை
இரண்டு கைகோளை
உடையது. ஒன்று களவு; மற்றொன்று கற்பு. களவு பற்றிய
செய்திகளைக் கொண்ட
இயல் களவியல்; கற்பு பற்றிய
செய்திகளைக் கொண்ட இயல் கற்பியல். இப்பாடத்தில் நம்பியகப்
பொருள் கூறும் களவியல் செய்திகள் விவரிக்கப் படுகின்றன.
பாடம் இரண்டில் கற்பியல் செய்திகள்
விவரிக்கப்படுகின்றன.
தலைவன், தலைவியர் ஆகிய இருவரும் திருமணத்துக்கு
முன்பு தாமாகவே கண்டும் கூடியும் இன்புறும் மறைமுக
வாழ்க்கையே களவாகும்.
பிறர் பொருளை அவர் அறியாமல் ஒருவர்
எடுத்துக்கொள்வது களவாகும். அதுபோல
பெற்றோர்க்குரியவளான தலைவியை அவர்கள் அறியாதவாறு
தலைவன் தன் வசப்படுத்திக் கொள்வதும் களவுதான். ஆயினும்
முன்னைய களவு இழிவானது; பின்னைய களவு, கற்பு வாழ்வை
எதிர்நோக்கிச் செயற்படுவதால் சிறந்ததாகக்
கருதப்படுகிறது.
இக்களவு மணமானது. ரிக், யசூர், சாமம், அதர்வணம்
ஆகிய நான்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள எட்டு வகை
மணங்களுள் ஒன்றான காந்தருவ மணத்துக்கு ஈடாகக்
கருதப்படுகிறது. காந்தருவ மணம் என்பது பெண் கொடுப்பாரும்
(பெண் வீட்டார்) பெண் எடுப்பாரும் (மாப்பிள்ளை வீட்டார்)
இன்றி தாமே கூடி இன்புறுவது ஆகும். அதுபோலத்தான் களவும்
என்பதை,
ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப
(களவியல் -சூ. 1)
என்று நம்பியகப் பொருள் குறிப்பிடுகிறது.
மேலே கூறப்பட்டுள்ளவாறு நான்கு வேதங்களில்
கூறப்பட்டுள்ள எட்டுவகை
மணங்களையும் அதற்குரிய
விளக்கங்களையும் தெளிவுறுத்தும் வகையில் கீழ்க்கண்ட
அட்டவணை
அமைகிறது.
வ.எண்
எட்டு வகை
மணங்கள்
விளக்கங்கள்
படைத்த ஒருவனுக்கு கன்னியை
அலங்கரித்துத் தீ சாட்சியாகக்
கொடுத்தல்.
தலைமகளின் பெற்றோரும்
சம்மதித்துத் தலைமகளை
அலங்கரித்துத் தீ சாட்சியாகக்
கொடுத்தல்.
வீட்டாரிடமிருந்து வாங்கிக்
கொண்டு கன்னியை அலங்கரித்துத்
தீ சாட்சியாகக் கொடுத்தல்.
தலைமையானவனான
ஆசிரியனுக்குக் கன்னியை
அலங்கரித்துத் தீ சாட்சியாகக்
கொடுத்தல்.
எடுப்போரும் இன்றித் தலைவன்
தலைவியர் இருவரும் தாமே
எதிர்ப்பட்டுப் புணர்தல்.
சுற்றத்தாருக்கும் வேண்டுவன
கொடுத்துத் தலைவியை மணத்தல்.
உறவினரிடமோ சம்மதம் பெறாது
வலிந்து கொள்வது.
கிடப்பவள் ஆகியோரைப்
புணர்வது.