Primary tabs
செய்யுளில் இடம்பெறும் சொற்கள் செய்யுள் தரும்
பொருளைப் பெற
உதவுகின்றன. அத்தோடு நின்று விடாமல்
பொருள் தரும் அச்சொற்களே அழகுற அமைவது சொல்லணி
எனப்படுகின்றது.
எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் தந்து
சொல்லாகின்றன. அவ்வாறு உருவாகும் ஒரு சொல் இரு
வகையில் அதாவது சொல் என்ற அளவிலும், பொருள் தருதல்
என்ற
நிலையிலும் மக்களுக்குப் பயன்படுகின்றது.
மரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

மரம் என்று சொன்னதும், நம் மனதில் அது பொருள்
நிலையில் நாம்
முன்னர் பார்த்த ஏதேனும் ஒரு மரத்தை நினைவு
படுத்துகின்றது. அதன் அடிப்பகுதி, உடல்பகுதி, கிளைகள்,
இலைகள் முதலியன மரம் என்ற பொருளைச் சொன்னதும் நம்
நினைவிற்கு வந்து
விடுகின்றன.

அதே நேரத்தில் மரம் என்ற சொல் ம+ர+ம் என்ற
எழுத்துக்களின் கூட்டமைப்பால் உருவானது. இப்போது மரம்
என்ற சொல் சொல்லளவில் நமக்குப் பயன்படுகின்றது.
எனவே மரம் என்ற சொல் பொருள் நிலையிலும், சொல்
என்ற அளவிலும்
நம்மால் பயன்கொள்ளப் பெறுகின்றது என்பது
தெளிவாகின்றது. இதனை இன்னும் சற்று விளக்கமாகக்
காண்போம்.
வீடு கட்டவும் பயன்படுகிறது.
அவற்றுள் ம, ர ஆகியன உயிர்மெய் எழுத்துக்கள். ம்
என்பது மெல்லின மெய் எழுத்து.
மேலே இரு பத்திகள் உள்ளன. அவ்விரு பத்திகளும் மரம்
என்றே தொடங்கப் பெற்றுள்ளன.
இருப்பினும் இரு பத்திகளில்
இடம் பெறும் மரம் என்ற சொல் ஒரே நிலையில்
பயன்படவில்லை.
முன்னதில் மரம் பொருளாகப்
பயன்பட்டுள்ளது. பின்னதில் மரம் - சொல் என்ற நிலையில்
பயன்பட்டுள்ளது.
தற்போது சொல்லின் இருவகைப் பயன்பாட்டையும் நாம்
தெளிவாக அறிந்து கொண்டோம். தொல்காப்பியர் இதனையே,
“சொன்மை தெரிதலும், பொருண்மை தெரிதலும்” சொல்லின்
இயல்பு என்கிறார்.
இம்மூன்று சொற்களையும் கூர்ந்து கவனியுங்கள். இவற்றை
நீங்கள் சொல்லின் இடப்பக்கத்திலிருந்து
வலப்பக்கமாக (அதாவது
இயல்பாகத் தமிழைப் படிக்கும் முறை) ஒரு முறை படியுங்கள்.
அடுத்து வலப்பக்கத்திலிருந்த
இடப்பக்கமாக மறுமுறை
படியுங்கள்.
படித்துப் பார்த்தீர்களா; ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தீர்களா;
இல்லை அல்லவா.
இதைப் போலவே மேற்காட்டிய மற்ற சொற்களும் சொல்லில்
மாற்றத்தைத் தராமல் அமையும். இப்பயிற்சியின் வழியாக
சொற்களுக்குள்ளே சில அமைப்புகளைச் செய்து
அழகூட்டமுடியும் என்பது தெளிவாகிறது.

என்ற ஒரு வேடிக்கைச் சொல் அடுக்கு தமிழகத்துச்
சிறுவர்களிடையே பயின்று
வருகிறது. இதற்குள்ளும் ஒரு சொல்
அழகு உள்ளது.
இவ்வேடிக்கைச் சொல்லடுக்கை மேற்கண்ட 1, 4. 7, 2. 5,
8,
3, 6, 9 என்ற நிலையில்
ஒரு முறை படியுங்கள். அதன் பின்,

என்ற நெடுக்கு வாட்டிலும் படியுங்கள். குறுக்கு வாட்டில்
முன்னர் படித்த போதும், தற்போது நெடுக்கு வாட்டில் படித்த
போதும் சொல்லடுக்கு மாறாது வருவதை நீங்கள் உணரலாம்.
இரண்டையும் இணைத்து,

என்று நீங்கள் படித்து, அமைத்து மகிழலாம்.
சொல் அழகு -1 என்ற தலைப்பில் கூறப்பட்ட சொற்கள்
(விகடகவி, திருபருதி,
MALAYALAM) ஒரே சொல்லில் இடம்
பெற்ற வேடிக்கை ஆகும்.
சொல் அழகு - 2 என்ற இத்தலைப்பில் கூறப்பட்ட
வேடிக்கைச் சொல்லடுக்கு, பலசொற்களுக்குள் அமைக்கப்பட்ட
அழகு ஆகும்.
இவ்வாறு சொல் அழகைப் பலவகைகளில் உருவாக்க இயலும்.
இச்சொல் அழகுகளை இலக்கண ஆசிரியர்கள் சொல்லணி
என்கின்றனர். அச்சொல்லணி மேற்கண்ட அழகு போன்றதே
ஆகும். அதுவும் பலவகைப்
படுவதாகும்.