Primary tabs
 சிற்பக் கலையில் சோழர்களது காலம் பொற்காலம் என்று
 கூறும்
 அளவிற்குக் கோயில்களில் கல்லினாலான சிற்பங்களை
 அழகுற
 அமைத்துப் போற்றி வந்துள்ளனர் சோழ மன்னர்கள்.
 இன்றும்
 அவற்றுள் பெரும்பாலானவை காணக் கிடைக்கின்றன.
 
 ஆனால் ஓவியக் கலையைப் பற்றிய 
 வகையில் சோழர்
 ஓவியங்கள் நமக்கு ஒரே ஒரு 
 கோயிலில் மட்டுமே கிடைக்கின்றன.
 எனினும் அந்த ஓவியத் தொகுதியின் வண்ணமும் வனப்பும்
 அக்காலத்தில் ஓவியக் கலை சிறப்புற்று இருந்ததைப் பறை
 சாற்றுவதாக அமைகின்றன. சோழர் காலத்தைச் சேர்ந்த
 ஓவியங்கள்
 அதிக அளவில் கிடைக்காமல் போனாலும் கிடைத்த
 ஓவியமானது 
 பல்லவர்     மற்றும்     விசயநகர நாயக்கர்
 ஓவியங்களின் இடைப்பட்ட 
 காலத்தில் நிலவிய ஓவிய மரபை
 அறிய 
 உதவுகிறது.
 
கருதலாம்?
எவ்வாறு சித்திரிக்கப் படுகின்றனர்?