Primary tabs
4.0 பாட முன்னுரை
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் உலா
இலக்கியமும் ஒன்று.
சங்ககாலம் தொடங்கி இன்று வரை உலா இலக்கியத்தின்
கூறுகளை இலக்கியங்கள் கூறியுள்ளன.
என்றாலும் பல்லவர்
காலத்தில்தான் முதல் உலா நூல் கிடைத்துள்ளது.
உலாவிற்கான இலக்கணம்
தொல்காப்பியத்தில் உள்ளதையும்
காணப்படுகிறது.
இந்த இலக்கியங்கள் உலா என்ற பெயரில் வழங்கி
வந்தாலும் வேறு சில பெயர்களும் இவற்றிற்கு உண்டு. வலம்
வருதல், ஊர்வலம் வருதல், பவனி, பவனி உலா, உலாப்புறம்,
உலா மாலை என்று இவ்வுலா இலக்கியத்திற்குப் பல
பெயர்கள் உள்ளன.
நண்பர்களே! சுவையும் நயமும் நிறைந்த
இத்தகைய தமிழ்
இலக்கியங்களுள் ஒன்றாகிய உலா இலக்கியம் பற்றி
இப்பாடத்தில் அறிய இருக்கிறோம். உலா பற்றிய செய்திகள்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.