Primary tabs
6.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வகையில் அந்தாதி
இலக்கியமும் ஒன்று.
அந்தாதி தனி ஓர் இலக்கிய வகையாகப் பிற்காலத்தில்
உருவெடுத்தது. ஆனாலும் அதன் கூறுகள் சங்க
இலக்கியத்திலேயே காணப்படுகின்றன.
ஆயிரத்து ஐநூறுக்கும்
மேற்பட்ட அந்தாதி இலக்கியங்களை 'அந்தாதி' எனும்
கட்டுரை (க. காந்தி, 1980) பட்டியல் இட்டுள்ளது.
சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களைப்
பெற்றவற்றுள்
அந்தாதியும் ஒன்று.
நண்பர்களே! இந்தப் பாடம் அந்தாதி இலக்கியங்களின்
பொதுத் தன்மைகளை
அறிமுகப்படுத்துகிறது. மேலும் அபிராமி
அந்தாதியைச்
சிறப்பு நிலையில் விளக்குகிறது.