Primary tabs
பொதுவாகப் பண்பாடு (Culture) என்பதைப் பற்றிப் பல்வேறு
வகையான கருத்துகள் கூறப்படுகின்றன. நாகரிகத்திற்கும்
(Civilization) பண்பாட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் நாகரிகக்
கூறுகளைப்
பண்பாட்டுக் கூறுகளாகக் குறிப்பிடுகின்றனர். எனவே
பண்பாடு என்றால் என்ன என்பதனைத் தெளிவாக அறிந்து
கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. மேலும் தமிழர்
பண்பாடு பற்றிப் பல பாடங்கள் அமைய உள்ளன. அதனால்,
பண்பாடு என்பதனைப் பற்றி ஒரு தெளிவான, முழுமையான
விளக்கம் தேவை என்பதனை உணர்ந்து இந்தப் பாடம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தில் பண்பாடு என்றால்
என்ன என்பது பற்றிய விளக்கம், பண்பாட்டின் வகைகள்,
பண்பாட்டின் கூட்டுவடிவங்கள், பண்பாட்டின் எல்லை,
பண்பாட்டின் மாற்றங்கள், முதலியன
எடுத்துக்காட்டுகளுடன்
முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.