தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.0 பாட முன்னுரை

1.0 பாட முன்னுரை


கவிதையால் செய்யப்பட்டது காப்பியம். காப்பியத்தைத்
தொடர்நிலைச் செய்யுள் என்றும் கூறுவர். தமிழில் ஐந்து
பெருங்காப்பியங்கள் உள்ளன. இவற்றைத் தவிரப் பிற
காப்பியங்களும், சிறுகாப்பியங்களும் உள்ளன. காப்பியங்களுக்குப்
பல தகுதிகள் உள்ளன. அவற்றில் இரண்டு தகுதிகள்
முக்கியமானவை,

  • நிகரில்லாத தலைவனைப் பெற்றிருக்க வேண்டும்.

  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளைக் கூறுவனவாக இருக்க வேண்டும்.

இனிக் காப்பியங்கள் தோன்றிய காலத்தில் தமிழர் பண்பாடு எந்த
நிலையில் இருந்தது என்பதை இந்தப் பாடத்தில் காணலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)