Primary tabs
 தமிழ்த் திரைப்பட உலகில் ஏறத்தாழ 
 இருபத்தைந்து
 ஆண்டுகள் (1955-81) மிகச் சிறந்த 
 பாடலாசிரியராக
 விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன். தமிழ் இலக்கிய உலகம்
 இவரைக் கவிஞர் என்றே அடையாளம் கண்டது. எனினும்
 இவரது உரைநடை தமிழின் அழகையும் 
 சுவையையும்
 வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆதலின் அன்பு
 மாணவர்களே! கண்ணதாசனின் இனிய திரையிசைப்
 பாடல்களைச் 
 செவிமடுத்து மகிழ்ந்திருக்கும் நீங்கள் அவரது
 உரைநடையின் 
 சிறப்பையும் அறிந்து கொள்ள வேண்டும்
 அல்லவா? எனவே, 
 இந்தப் பாடம் உங்களுக்குக்
 கண்ணதாசனின் உரைநடையை
 அறிமுகப் படுத்துகிறது.