அஃறிணைவிரவுப்பெயர் - உயர் திணைப்பெயரோடு
அஃறிணை சென்று விரவியபெயர்
அகக்கருவி - அஃதாவது : செய் கைப்படுதற்குரிய
நிலைமொழி யீறுபற்றியேனும்,
வருமொழி
முதல்பற்றியேனும் வரும் எழுத்து விதிகளைக் கூறுவது
அகச்செய்கை - அஃதாவது : நிலைமொழியீறு
இன்ன இன்னவாறு முடியுமெனக் கூறுவது
அகத்தோத்து - அகச்செய்கைக் குரிய இயல்
அகப்புறக்கருவி - அஃதாவது : புணர்ச்சி
யிலக்கணமும், புணர்ச்சிக்குரிய
திரிபுகளிவை
யென்பதும், இயல்பும், புணர்ச்சி வகையும்,
நிலைமொழிகள்
செய்கைவிதியிற் பெறுஞ்
சாரியைகள் வரு மொழியோடு புணருங்கால் அடையுந்
திரிபுகளுமாகிய இருமொழிகளும் செய்கைப்
படுதற்கேற்றவாய்வரும் விதிகளைக் கூறுவது
அகப்புறச்செய்கை - அஃதாவது : நிலைமொழியீறுபெறும்
முடிபன்றி, நிலைமொழியீறு
பெற்றுவரும் எழுத்து
முதலியற்றின் முடிபு கூறுவது
அங்காத்தல் - வாயைத் திறத்தல்
அசைநிலையாந்தன்மை - அசை நிலையாமியல்பு
அப்பான்மொழி - அப்பகுதி யானமொழி; என்றது,
ஒற்று மிகத்தோன்றாத மொழிகளை.
அல்வழி
என்றதனால், ஒற்று மிகத்தோன்றாதமொழி என்பது
பெறப்படும்
அருகல் - அரிதாய்வரல் (சிறுபான்மை)
அருத்தாபத்தி - பொருட்பேறு
அருவாளர் - அருவாள தேயத்தார்
அலகுபெறல் - அசைக்குரிய எழுத்தாக எண்ணப்பெறல்
அழன்புழன் - வழக்குவீழ்ந்த சொற்கள்
அழான்புழான் - அக்காலத்து வழங்கியஇயற்பெயர்கள்
அன்றியனைத்தும் - அவ்வனைத்தும், அகரச்சுட்டுத்
திரிந்து அன்றி என நின்றது
அனையனல்லோன் - அத் தன்மையனல்லோன்