தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பிடவம்

251. முல்லை
மடவ வாழி-மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:19:05(இந்திய நேரம்)