தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நாய் (ஞமலி)

179. குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:22:57(இந்திய நேரம்)