Primary tabs
திங்கண்மும் மாரி பெய்யத் தென்னவன் செங்கோ
லோங்க
மங்களம் பொலியும் பாண்டி மண்டல சதகம் வாழ்க
சங்கமா மதுரை மூதூர்ச் சங்கரர் சடையின் மீதிற்
கங்கையார் பெற்ற சித்திக் கணபதி காப்புத் தானே.
(1)
தண்டமிழ் வழங்கத் தென்னன் றனிச்செங்கோல்
தழைக்கப் பாண்டி
மண்டல சதக மென்னும் வடிதமிழ் வளர்ந்து வாழ்க
அண்டர்கள் முனிவோர் மாந்தர்க் கருள்செய வமிர்த ரூபங்
கொண்டவர் பரங்கொண் டாளுங் குமரனை வணக்கஞ் செய்வாம்.(2)