அருள்மிகு அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் திருக்கோயில்
அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் கழிஞ்சமலையில் உள்ளது. இம்மலையின் பழம்பெயர் திருப்பிணையன் மலை என்பதாகும். இம்மலையின் மேற்குப்பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்காக கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபத்தையும் கொண்டு விளங்குகிறது. இயற்கையான பாறையிலிலேயே உருவாக்கப்பட்ட இலிங்கம் கருவறையில் உள்ளது. மண்டபத்தில் முன்வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் “இடைச்சி மண்டபம்“ என்று அழைக்கப்படுகின்றது.
- பார்வை 559