தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் திருக்கோயில்

வரிச்சியூர் மலையின் மேற்குச் சரிவில் ஒரு குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன்அஸ்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சூரியன் மறையும் போது ஒளிக்கதிர்கள் இக்குடைவரையில் உள்ள லிங்கத்தில் விழுவதால் இறைவன் அஸ்தகிரீஸ்வரர் எனப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:34(இந்திய நேரம்)
சந்தா RSS - அஸ்தகிரீஸ்வரர் கோயில்