தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு கோபுரப்பட்டி சிவன் திருக்கோயில்

இக்கோயில் வாயில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய இலிங்கமும் (தாரலிங்கம்), தாமரைப்பூ வடிவில் ஆவுடையாரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையும் அர்த்தமண்டமும் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயில் தற்போது விமானத்தின் தளம் இன்றி காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் விமானத்தின் தளம் செங்கற்களால் கட்டப்பட்டதால் சிதைவுற்றது. இக்கோயில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்த மண்டபத்தில் சோழர்கால உருளைத்தூண்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் முறையே சிற்பங்கள் அமைந்துள்ளன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:39(இந்திய நேரம்)
சந்தா RSS - கோபுரப்பட்டி சிவன் கோயில்