தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு குறுங்காலீசுவரர் திருக்கோயில்

இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. குறுங்காலீசுவரர் கோயில் கருவறையில் வடதிசை நோக்கி இறைவன் இருப்பதால் இது மோட்ச தலமாகவும், இங்குள்ள தீர்த்தம் பித்ரு பரிகார பூஜை செய்ய ஏற்ற இடமாகவும் கூறப்படுகிறது. இத்தலத்தில் வேறொரு சிறப்பும் உண்டு. அது யாதெனில், தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு தனிச் சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குறுங்காலீசுவரர் சிவன் கோயிலின் அருகில் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:56(இந்திய நேரம்)
சந்தா RSS - கோயம்பேடு