தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்

கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயில் திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:46(இந்திய நேரம்)
சந்தா RSS - சேரன்மகாதேவி