அருள்மிகு சொக்கீஸ்வரர் திருக்கோயில்
கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எளிய அமைப்புடைய காஞ்சிபுரம் சொக்கீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. விமானம் வட்டவடிவமுள்ளது. விமானத்தின் தலைப்பகுதியில் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அமைந்துள்ளன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம், கம்பு, பட்டிகை போன்ற தாங்குதள உறுப்புகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. தெற்க்கிருந்த நக்கர் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரைத்தூண்கள் அமைந்துள்ள கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அமைந்துள்ள தேவகோட்டத்தில் சோழர்கால சிற்பங்கள் உள்ளன.
- பார்வை 293