அருள்மிகு சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோயில்
காவிரி தென்கரை பிரமதேய ஊரான சோழமாதேவி சதுர்வேதி மங்கலமாகும். நான்கு வேதங்கள் அறிந்த பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊராகும். இவ்வூரில் ஆதிசங்கரரின் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதிய சிதாநந்த படாரர் என்பவரின் விரிவுரை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது சிறப்பு. ஆதிசங்கரரைப் பற்றிய தொன்மையான கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்றாகும். சோழர்களைப் பொறுத்தவர சோழமாதேவி கலைக்கோயில் ஒரு தனித்துவமாய் இருந்திருத்தல் வேண்டும். சோழ அரசியாரின் பெயரில் அமைந்த இக்கலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இங்கு நடந்த விழாக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
- பார்வை 866