தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில்

சென்னையின் வேளச்சேரி வட்டத்தில் வேளச்சேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியை இன்றும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. வேள் சேரி என்றிருந்ததே வேளச்சேரி ஆகியிருக்க வேண்டும். இப்பகுதி குறுநில மன்னனாகிய வேள் ஒருவனால் ஆட்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்பகுதியில் சோழர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த இக்கோயிலை கட்டி அதற்கு நிவந்தங்களையும் அளித்துள்ளனர். முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:58(இந்திய நேரம்)
சந்தா RSS - தண்டீஸ்வரர் கோயில்