அருள்மிகு தற்க்காகுடி சிவன் திருக்கோயில்
மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் தற்க்காகுடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் குளக்கரையில் ஒரு பிற்காலப் பாண்டியர் கால சிவன் கோயில் உள்ளது. இதன் சுவர்களில் உள்ள பிற்காலப் பாண்டியர்களான பராக்கிரம பாண்டியன், வீரபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளைக் கொண்டு இக்கோயில் 13-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது எனலாம். மேலும் இக்கோயில் கல்வெட்டுகளில் திருக்கோட்டீஸ்வரர் கோயில் என்றும், ஊர் தளுக்காய்குடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறு கருவறை, அர்ததமண்டபத்துடன் இன்று காட்சியளிக்கும் இக்கோயில், தொடக்கத்தில் திருச்சுற்று மதிலுடன் கூடிய விரிவான கோயிலாக இருந்துள்ளது.
- பார்வை 348