தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு திருக்கோகர்ணம் கோகர்ணீசுவரர் திருக்கோயில்

முதலாம் மகேந்திரவர்மனால் எடுப்பிக்கப்பட்ட புதுக்கோட்டை குடைவரைக் கோயில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் முதலாம் மகேந்திரவர்மனால் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. தாய்ப்பாறையிலேயே இலிங்கம் வெட்டப்பட்டுள்ளது. மண்டபங்கள், திருச்சுற்று முதலிய சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் 11 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களின் குலதெய்வமாக இக்கோயில் பெரியநாயகி அம்மன் விளங்கினாள். தொண்டைமான்கள் இக்கோயிலுக்கு கொடையளித்துள்ளனர்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:43(இந்திய நேரம்)
சந்தா RSS - திருக்கோகர்ணம்