அருள்மிகு திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோயில்
திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்சசேத்திரங்களுள் திருக்கோவிலூர் முதலாவது தலமாகும். இக்கோயிலில் உள்ள திரிவிக்கிரமர் உலகளந்த பெருமாள் சிற்பம் போல் உயரமான நின்ற நிலை சிற்பம் வேறு எங்கும் இல்லை எனலாம். புராண காலத்தில் கிருஷ்ணபத்ரா ஆறு தான் இப்பொழுது தென்பெண்ணையாறு எனப் பெயர் பெற்றுள்ளது. வைணவத்தலத்தில் துர்க்கையை காணுதல் அரிது. இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையை மூலவருக்கு அருகிலேயே காணலாம். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை சேர்த்தே தனது பாடலில் பாடியுள்ளார்.
- பார்வை 2640