அருள்மிகு ஆலம்பாக்கம் கைலாசநாதர் திருக்கோயில்
இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பராந்தக சோழன் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் அமரேஸ்வரப் பெருமான் என்றும், இவ்வூர் நந்திவர்ம மங்கலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் நந்திவர்ம பல்லவன் பெயரில் குறிப்பிடப்படுவதை நோக்குகையில் இவ்வூர் சதுர்வேதி மங்கலமாக கொடையளிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
- பார்வை 794