தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு சீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில்

மகேந்திரமங்கலம் என்று அழைக்கப்பட்ட பல்லவர்கால ஊர் தற்போது சீனிவாசநல்லூர் என்றழைக்கப்படுகிறது. காவிரிக்கரையில் அமைந்துள்ள இவ்வூர் திருச்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் முதலாம் ஆதித்தசோழனால் கட்டப்பட்ட முற்காலச் சோழர்கலைப்பாணியில் அமைந்த கற்றளி ஒன்று எழிலுற காட்சியளிக்கிறது. இக்கோயில் கல்வெட்டுகளில் இறைவன் திருக்குறக்குத்துறை பெருமானடிகள் என்று குறிப்பிடப்படுகிறார். குறக்குத்துறை என்பது காவரியாற்றின் குறுக்கே உள்ள துறையைக் குறிப்பிடுவதாகும். இவ்வூர் பல்லவர்காலத்தில் பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட ஊராகும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:44(இந்திய நேரம்)
சந்தா RSS - திருச்சி சீனிவாசநல்லூர்