அருள்மிகு தக்கோலம் வாலீஸ்வரர் திருக்கோயில்
தக்கோலம் ஊருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோயில் உள்ளது. தாங்குதளத்திலிருந்து கொடுங்கை வரை கல்லாலும், விமானம் செங்கல்லாலும் கட்டப்பட்டது. தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. விமானம் தற்போது வட்டவடிவில் உள்ளது. ஒரு தளக் கற்றளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலரும் அறிந்ததாகும். இவ்வூரில் அவன் தந்தை முதலாம் இராசேந்திரன் ஒரு கோயிலைக் கட்டியிருக்கலாம். அக்கோயில் இதுவாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குலோத்துங்க சோழபுரம் என்று இவ்வூர் பிற்காலச் சோழர் கல்வெட்டில் காணப்படுகிறது.
- பார்வை 1204