அருள்மிகு நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம்
விசயாலயச் சோழீஸ்வரம் முழுவதும் கற்றளியாகும். அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன், கோயிலைச் சுற்றிலும் எட்டுப் பரிவார சந்நிதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தளங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கருவறை வட்டவடிவமாகவும், அதனைச் சுற்றியுள்ள சுவர் சதுரமாகவும், அர்ததமண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேற்புறமுள்ள சிகரம் வட்டவடிவமாய் வேசரபாணியில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறமுள்ள அர்த்தமண்டபத்தில் பிற்கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.
- பார்வை 581