அருள்மிகு பனஞ்சாடி திருநீலகண்டர் திருக்கோயில்
பனஞ்சாடி என்னும் ஊரின் மொட்டையாண்டவர் குளத்தின் கிழக்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் “மொட்டையாண்டவர் கோயில்“ என்றும், “திருநீலகண்டர் கோயில்“ என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இது முற்காலப் பாண்டியர் கட்டடடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோயிலின் அடிப்பகுதி முதல் கூரைப்பகுதி வரை கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையாலான விமானம் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை.
- பார்வை 268