தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு பாமணி நாகநாதசுவாமி திருக்கோயில்

பாமணி ஆற்றின் தென்கரையில் நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. முன்பு இக்கோவில் பாமணி ஆற்றின் வடகரையில் இருந்ததாகவும் ஆற்றின் போக்கில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இக்கோவில் தற்போது தென்கரையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாக புற்று மண்ணால் உருவானவர். இவ்வாறு பாதாளத்திலிருந்து சுயம்பு மூர்த்தமாக சிவபெருமான் லிங்க வடிவில் வெளிப்பட்டதாலும் பாடல் பெற்றதாலும் இத்தலத்திற்கு திருப்பாதாளேச்சுரம் என்ற பெயரும் உண்டு. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இதன் வேறு புராணப் பெயர்கள் ஆகும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:50(இந்திய நேரம்)
சந்தா RSS - பாமணி நாகநாதர்