தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோயில்

கோயிலில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் முழுநிழலும் தெப்பக்குளத்தில் விழுமாறு அமைத்திருத்தல் சிறப்பு. சூரியனின் ஒளி தட்சிணாயன புண்ணிய காலத்திலும், உத்தராயணப் புண்ணிய காலத்திலும் கருவறையிலுள்ள இலிங்கத்தின் மீது படுமாறு கட்டடக் கலையை அமைத்திருத்தல் தனிச் சிறப்பாகும். இக்கோயிலில் ராஜகோபுரம், மத்திய கோபுரம், மேலக்கோபுரம் என மூன்று கோபுரங்களும், ஆறு விமானங்களும் அமைந்துள்ளன. கோயில் திருச்சுற்றில் வட்டவடிவிலான தாமரைப்பீடத்தின் மீது நின்று பார்க்கும் போது இவையனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பது நன்கு தெரியும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:45(இந்திய நேரம்)
சந்தா RSS - பிரம்மதேசம்