அருள்மிகு பிறவாதேஸ்வரர் திருக்கோயில்
“அத்யந்தகாமன்“ என்னும் அளவில்லா ஆசையுடையவனான இராஜசிம்ம வர்மப் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட இக்கற்றளி இருதளங்களைக் கொண்டது. வேசர பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தன்னை “சைவ சித்தாந்தி“ என்று கூறிக்கொள்ளும் இராஜசிம்மன் தன் விருப்பங்களையெல்லாம் ஒன்று சேர்த்து கட்டிய பல கற்றளிகளுள் இதுவும் ஒன்று. இக்கோயிலின் கலைப்பாணியை நோக்குங்கால் இறவாதீஸ்வரர் கோயில் கலைப்பாணியை அவ்வாறே ஒத்துள்ளது என்பது நோக்கத்ததக்கது. பிறப்பும் இறப்பும் இல்லா பெருமானாகிய சிவபெருமானுக்கு எடுக்கப்பட்ட இக்கற்றளி கருவறை விமான வெளிப்புற சுவர்களில் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
- பார்வை 404