அருள்மிகு பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உத்தமச் சோழன் காலம் முதல் தொடர்ச்சியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரமச்சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி மூன்று பெரிய குன்றுகள் இருப்பதால் பெருமுக்கல் (மூன்று பெரிய கற்கள்) என்ற பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் அமைந்துள்ள மலையின் மேற்புறச் சரிவில் இயற்கையான குகை போன்றதோர் பகுதி உள்ளது. இதனை ஊரார் சீதாப்பிராட்டி குகை என்று அழைப்பர். இங்கு பாறையில் கீறல் பொறிப்புடன் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. கீறல் வளைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும்.
- பார்வை 1539