தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு பேரங்கியூர் திருமூலநாதர் திருக்கோயில்

கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:42(இந்திய நேரம்)
சந்தா RSS - பேரங்கியூர் திருமூலநாதர் கோயில்