அருள்மிகு மடம் தடாகபுரீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்கிறது. குளத்தூர் என்பதே வடமொழியில் தடாகபுரி என்றாகி, இங்குள்ள இறைவன் தடாகபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டுள்ளார் எனக் கருத வாய்ப்புண்டு. இக்கோயிலில் பிற்காலச் சோழர்கள் கல்வெட்டு இடம்பெறுகிறது. இக்கோயிலைச் சார்ந்த கி.பி. 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று “சம்பாபிக அமராபதி சாத்தார் மகன் காதலியார் மண்டபம் கட்டியுள்ளார்” என்பதைக் குறிப்பிடுகின்றது. இம்மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் அல்லது திருமண மண்டபமாயிருக்கலாம் எனத் தெரிகிறது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் அம்மனுக்கு தனி திருமுன் கட்டப்பட்டது.
- பார்வை 853