அருள்மிகு மருதவனம் ஸ்ரீ மத்தியார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மருதவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. மேற்காகவும் மன்னார்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ. தென்-கிழக்காகவும் இவ்வூர் அமைந்துள்ளது. மகாமண்டபத்தினுள் பாலாம்பிகை திருமுன் கருவறை மற்றும் இடைநாழிகையுடன் காணப்படுகிறது. கருவறையின் வெளிப்புறம் வடக்கே 4.96 அடி நீளமும் அதே அளவு அகலமும் கொண்டு சண்டீகேஸ்வரர் திருமுன் காணப்படுகிறது. இக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் துர்க்கா காளியம்மன் திருமுன் 5.83 அடி நீளமும் 6.68 அடி அகலமும் கொண்டு காணப்படுகிறது.
- பார்வை 816