அருள்மிகு வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்
தஞ்சை மாவட்டத்திலேயே 316-15 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய ஏரியான ஸ்ரீகோதண்டராமர் ஏரி இவ்வூரில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அழகிய ஊர் , இளமையான ஊர் எனும் பொருளில் வடுவூர் எனப்படும் இத்தலத்திற்கு வகுளாரண்யம் (மகிழங்காடு), பாஸ்கர க்ஷேத்திரம், தக்ஷண அயோத்தி எனும் திருப்பெயர்களும் உண்டு. பல்லக்கு, திருச்சிவிகை, 3 திருநாமங்களுடன் சூரியப்பிரபை, சேக்ஷவாகனம், கருடவாகனம், ஹனுமன்வாகனம், யானை வாகனம், ஹம்சவாகனம், குதிரை வாகனம். ஸ்ரீராமாயணக்காட்சிகளை சித்தரிக்கும் பழைய திருத்தேர் ஒன்று உண்டு.
- பார்வை 1620