தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு விட்டலர் திருக்கோயில்

விட்டலர் கோயில் கருவறையில் விட்டலரின்திருமேனி நின்ற கோலத்தில் இடது கையில் சங்கு ஏந்தியும், வலது கையில் அபய முத்திரைத் தாங்கியும் காட்சியளிக்கின்றது. திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமும் ஒன்றாகும். கிருஷ்ணனின் மற்றொரு வடிவம் “விட்டலர்“ எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. விட்டலர் விஜயநகர மன்னர்களின் குலதெய்வமாகக் கருதப்படுகிறார். விட்டலருக்காக எடுக்கப்பட்ட தனிக்கோயில் தமிழகத்தில் இது ஒன்றேயாகும். இக்கோயிலில் தாயாருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், திருச்சுற்று மதில், கோபுர வாயில் ஆகிய பல்வேறு பகுதிகளுடன் பாங்குற அமைந்துள்ளது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:32(இந்திய நேரம்)
சந்தா RSS - விட்டலர் கோயில்