அருள்மிகு கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் திருக்கோயில்
இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் புராதன சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இக்கோயில் பராந்தக சோழன் காலக் கோயிலாகும். கோட்டங்கள் வெற்றிடமாக காணப்படுகின்றன. கண்டமங்கலம் என்னும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தமசோழனின் தந்தையும், மேற்கெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- பார்வை 842